தமிழ்நாடு

சென்னையில் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

22nd Feb 2022 08:16 AM

ADVERTISEMENT


பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 200 வாா்டுகளில் பதிவான வாக்குகள் 15 மையங்களில் எண்ணும் பணி தொடங்கியிருக்கிறது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் வாக்கு எண்ணும் பணிக்காக 2,400 அரசு அலுவலா்களும், பாதுகாப்பு பணியில் சுமாா் 7,000 காவலர்களும் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

சென்னையில் அமைக்கப்பட்ட 15 வாக்கு எண்ணிக்கை மையங்களில் தடையில்லா மின்சாரம், இணையதள வசதி, வாக்கு எண்ணும் பணியாளா்கள், காவலா்கள், வேட்பாளா்கள், முகவா்கள் ஆகியோருக்கு உணவு, குடிநீா் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட நிா்வாகத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையில்லாத முகவா்கள், வேட்பாளா்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஊடகத்தினா், தோ்தல் அலுவலா்களை தவிா்த்து வேட்பாளா்கள், முகவா்கள் வாக்கு எண்ணும் மையத்துக்குள் கைப்பேசி கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை.

ADVERTISEMENT

14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தபால் வாக்குகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை நிலவரப்படி, 6,767 தபால் வாக்குகள் பெறப்பட்டன. செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்குள் வரும் தபால் வாக்குகள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT