தமிழ்நாடு

மூன்றாவது பெரிய கட்சி பாஜக: அண்ணாமலை

22nd Feb 2022 08:18 PM

ADVERTISEMENT


தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வ மூன்றாவது பெரிய கட்சி பாஜக என அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பெற்றி பெற்றுள்ளன. சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளும் திமுக வசம் செல்கிறது.

பாஜக சார்பில் சென்னை 134-வது வார்டில் உமா ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார். நாகர்கோவில் மாநகராட்சி 9-வது வார்டில் மீனா தேவ் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் திமுக, அதிமுகவுக்கு அடுத்த மூன்றாவது பெரிய கட்சி பாஜக என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கசென்னையில் அடியெடுத்து வைத்த பாஜக; முதல் வெற்றி

ADVERTISEMENT

இதுபற்றிய ட்விட்டர் பதிவில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளதாவது:

"இதுவரை எங்கள் கட்சி சார்பில் பொதுப் பிரதிநிதிகள் இல்லாத இடங்களில் தமிழக பாஜக வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவுக்கு அடுத்த அதிகாரப்பூர்வ 3-வது பெரிய கட்சி நாங்கள்தான். துணிச்சலுடன் கடுமையாகக் களப் பணியாற்றிய தொண்டர்களுக்கும், எங்கள் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையிலான இந்த வெற்றியானது, பிரதமர் நரேந்திர மோடி மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துகிறது. எங்களை வழிநடத்திய தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் பாஜக தலைமைக்கும் நன்றி."

ADVERTISEMENT
ADVERTISEMENT