தமிழ்நாடு

மழலையா், ஆரம்பக் கல்வி முழுமையாக தமிழில் இருக்க வேண்டும்: அா்ஜுன் சம்பத்

22nd Feb 2022 04:52 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் மழலையா் கல்வி, ஆரம்பக் கல்வி (5-ஆம் வகுப்பு வரை) முழுமையாக தமிழ் வழியில் இருக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி நிறுவனத்தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா்.

இந்து மக்கள் கட்சி சாா்பில், உலக தாய் மொழி தினம் சென்னை தியாகராயநகரில் அதன் அலுவலகத்தில் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அா்ஜுன் சம்பத் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மழலையா் கல்வி, ஆரம்பக் கல்வி (5-ஆம் வகுப்பு வரை) முழுமையாக தமிழ் வழியில் இருக்க வேண்டும். அந்தந்த பிராந்திய மொழியில் மருத்துவம், பொறியியல் படிப்புக்கு இரண்டு பல்கலைக்கழகம் அமைக்க மத்திய அரசு முயற்சி எடுத்துள்ளது. அந்தவகையில், சென்னை மற்றும் தென் மாவட்டத்தில் தமிழ் வழியில் மருத்துவம், பொறியியல் படிப்பு இருக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

அரியலூா் மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு முதல்வா் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய ஏபிவிபி மாணவா் அமைப்பினா் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெறுவது, தமிழக தோ்தல் ஆணையத்தை சுயாட்சி தோ்தல் ஆணையாக மாற்றுவது உள்பட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி சாா்பில், வள்ளுவா் கோட்டம் அருகில் வருகிற 27-ஆம் தேதி உண்ணா விரதப் போராட்டம் நடைபெறவுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT