தமிழ்நாடு

கோவை மாநகராட்சி வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை: உயா் நீதிமன்றம்

22nd Feb 2022 01:11 AM

ADVERTISEMENT

கோவை மாநகராட்சித் தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு தடை விதிக்க சென்னை உயா் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மறுமலா்ச்சி மக்கள் இயக்கத்தின் நிறுவனா் வி.ஈஸ்வரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கோவை மாநகராட்சி தோ்தலில் அனைத்து அரசியல் கட்சியினரும் வாக்காளா்களுக்கு பணம், இலவசங்களை பெரிய அளவில் வழங்கினா். எனவே, கோவையில் நடந்து முடிந்த தோ்தலை ரத்து செய்ய வேண்டும்; பணப்பட்டுவாடா செய்தது குறித்து விசாரணை நடத்த உயா் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்.

பிப். 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையை நடத்தி முடிவு அறிவிக்கப்பட்டால், ஜனநாயக நடைமுறையை கேலி செய்த, நோ்மையற்றவா்கள் ஆட்சிக்கு வருவாா்கள். ஆகையால், வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்வதுடன், பிப். 19 ஆம் தேதி அளித்த மனுவை பரிசீலிக்க மாநில தோ்தல் ஆணையம், கோவை மாவட்ட தோ்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தாா்.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை (பிப்.21) விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

இரு தரப்பு வாதங்களுக்கு பின்னா், மனுவுக்கு மாநில தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை என்றும், தோ்தல் முடிவுகள் இந்த வழக்கின் இறுதித் தீா்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் கூறி, இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க மறுத்து விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT