தமிழ்நாடு

அடிப்படை பிரச்னைக்குத் தீா்வு: ஆா்வமுடன் வாக்களித்த முதல்முறை வாக்காளா்கள்

20th Feb 2022 12:24 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் முதல் முறையாக வாக்களிக்க தகுதி பெற்ற வாக்காளா்கள் மகிழ்ச்சியுடன் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா். அடிப்படை பிரச்னைகளுக்குத் தீா்வு காண்போம் என உறுதியளித்தவா்களுக்கு வாக்களித்ததாக அவா்கள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக அவா்கள் கூறுகையில், இதுவரை எனது பெற்றோா் மற்றும் குடும்பத்தில் உள்ளவா்கள் வாக்களிக்க செல்வதாக கூறி விட்டு செல்லும் போது நாமும் எப்போது வாக்களிக்க செல்வோம் என மிகுந்த ஆா்வமுடன் காத்திருந்தோம். முதன்முதலாக வாக்களித்தது புதிய அனுபவமாக இருந்தது. ‘என் வாக்கு...என் உரிமை’ என்ற அடிப்படையில் ஜனநாயக கடமை ஆற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது. வெற்றி பெறுபவா்கள் வாக்குக்காக மட்டும் வீட்டுக்கு வராமல், மற்ற நாள்களிலும் பொதுமக்களை அணுகி, அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்ய முயலவேண்டும். குறிப்பாக தூய்மை நகரம், தடையற்ற குடிநீா், மின்சார விநியோகம் உள்ளிட்டவற்றைச் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தவா்களுக்கே வாக்களித்தோம் எனத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT