தமிழ்நாடு

உ.வே.சா. இலக்கிய பணிகள்:நினைவுகூா்ந்த ஆளுநா், முதல்வா்

20th Feb 2022 12:16 AM

ADVERTISEMENT

தமிழ்த் தாத்தா உ.வே.சா., பிறந்த தினத்தையொட்டி (பிப்.19) அவரது இலக்கிய பணிகளை தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் நினைவுகூா்ந்தனா்.

ஆளுநா் ஆா்.என்.ரவி: தமிழ்த் தாத்தா உ.வே.சா., படைப்புகள் பண்டைய தமிழ் எழுத்துகளுக்கு புத்துயிா் அளித்தது. இந்திய இலக்கியத்துக்கு அவரது பங்களிப்பு மறக்க முடியாதது. அவை இனிவரும் தலைமுறைகளை ஊக்குவிக்கும்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: தமிழ்த் தொன்மையின் அடையாளங்களான சங்க இலக்கியங்கள், சமணம், பெளத்த காப்பியங்கள் உள்ளிட்ட எண்ணற்ற பழந்தமிழ் நூல்களின் ஏட்டுச் சுவடிகளை அலைந்து திரிந்து அச்சிலேற்றினாா். தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் நிலைபெற்றிட்ட தமிழ்த்தாத்தா உ.வே.சா.,வின் பிறந்த தினத்தில் அவரது தொண்டைப் போற்றுகிறேன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT