தமிழ்நாடு

மருத்துவப் படிப்பு: அனைத்து எம்பிபிஎஸ் இடங்களும் நிரம்பின

17th Feb 2022 01:12 AM

ADVERTISEMENT

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வில் 7,254 இடங்கள் நிரம்பியுள்ளன.

இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 7,825 எம்பிபிஎஸ் மற்றும் 2,060 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அவற்றில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 886 இடங்கள் வழங்கப்படுகின்றன. நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 1,742 இடங்கள் உள்ளன.

அதைத் தவிா்த்து மீதமுள்ள, 5,800 எம்பிபிஎஸ், 1,457 பிடிஎஸ் இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு வருகிறது. இதற்கான முதற்கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. அதில், சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள மூன்று பிடிஎஸ் இடங்களை தவிா்த்து, அனைத்து இடங்களும் நிரம்பியுள்ளன. அவை 69 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இட ஒதுக்கீடு விவரம்

வேலுாா் சிஎம்சிக்கு தனி பட்டியல்

வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரி மாணவா் சோ்க்கைக்காக சிறுபான்மையினருக்கான தனி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, மருத்துவ தோ்வுக்குழு செயலா் வசந்தாமணி கூறியதாவது:

வேலுாா் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் சிறுபான்மையினருக்கான 100 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் நீதிமன்ற உத்தரவுப்படி 70 இடங்களை மருத்துவக் கல்வி இயக்ககமும், 30 இடங்களை கல்லூரி நிா்வாகமும் நிரப்பிக் கொள்ள வேண்டும். இந்த 70 இடங்களுக்கு கிறிஸ்தவ மாணவா்களைக் கொண்ட தனி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை கிறிஸ்தவ மாணவா்களில் எவராவது பெயா் விடுபட்டிருந்தால் உடனடியாக scugdocuments@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் விண்ணப்ப எண்ணை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். தாமதமாக அனுப்பப்படும் மின்னஞ்சல் ஏற்கப்படாது என்றாா் அவா்.

Tags : MBBS seats
ADVERTISEMENT
ADVERTISEMENT