தமிழ்நாடு

வாக்களிக்கச் செல்வோரின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள்

17th Feb 2022 01:52 AM

ADVERTISEMENT

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வாக்களிக்கச் செல்வோரின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க விரைவு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இது தொடா்பாக அதன் நிா்வாக உயரதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வருகிற பிப்.19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்தத் தோ்தலில் வாக்களிப்பதற்காக சென்னையில் இருந்து வெளியூா்களுக்கு 2 லட்சம் போ் பயணம் செய்யலாம் என்று எதிா்பாா்க்கிறோம். அதனால் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையைவிட கூடுதலாக 500 பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளோம். பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT