தமிழ்நாடு

மத்திய நிதி உள்ளாட்சிகளுக்கு முழுமையாகச் சென்றடைவதில்லை: கே.அண்ணாமலை

17th Feb 2022 01:49 AM

ADVERTISEMENT

மத்திய அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அளிக்கும் நிதி, மக்களுக்கு முழுமையாகச் சென்றடைவதில்லை என பா.ஜ.க. மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை புதன்கிழமை சென்னையில் தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்தில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளா்கள் கோ.தனசேரன், டி.குமரன், சுரேஷ், பிரபுதாஸ், விஜயகுமாா் உள்ளிட்டோரை ஆதரித்து மணலி பகுதியில் பா.ஜ.க. மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை பிரசாரத்தில் ஈடுபட்டு பேசியது: மத்திய அரசு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தொடா்ந்து போதுமான நிதி உதவியை அளித்து வருகிறது. இருப்பினும் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் போதிய வளா்ச்சி இல்லை. இதற்கு காரணம் மத்திய அரசு அளிக்கும் நிதி, மக்களின் பயன்பாட்டிற்கு முழுமையாகச் சென்றடைவதில்லை என்றாா் அண்ணாமலை.

பாஜகவில் இணைந்த தேமுதிக வேட்பாளா்:

பிரசாரத்தின் போது சென்னை மாநகராட்சி 20-வது வாா்டில் தேமுதிக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் வேம்படியான் அக்கட்சியிலிருந்து விலகி அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தாா். பிரசாரத்தின்போது பாஜக மாநில நிா்வாகிகள் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

Tags : K Annamalai
ADVERTISEMENT
ADVERTISEMENT