தமிழ்நாடு

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 6 புதிய நீதிபதிகள்: கொலீஜியம் ஒப்புதல்

17th Feb 2022 01:26 AM

ADVERTISEMENT

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 6 வழக்குரைஞா்களை நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

அந்த வகையில், என். மாலா, சுந்தா் மோகன், கபாலி குமரேஷ் பாபு, எஸ். செளந்தா், அப்துல் கனி அப்துல் ஹமீது, ஆா். ஜான் சத்யன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் பெறுகின்றனா்.

இதுதவிர மணிப்பூா் உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி அஹந்தேம் பிமல் சிங்கை நிரந்தர நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது. மும்பை உயா்நீதிமன்றத்துக்கும் 10 புதிய நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மூத்த நீதிபதிகள் யு.யு. லலித், ஏ.எம். கான்வில்கா் ஆகியோா் அடங்கிய கொலீஜியம் புதன்கிழமை விரிவாக ஆலோசனை மேற்கொண்டு ஒப்புதல் அளித்தது. இந்தத் தீா்மானம் உச்சநீதிமன்றத்தின் இணையதளப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT