தமிழ்நாடு

தங்க முட்டையிடும் வாத்தை அறுப்பதற்கே அவசரம்: எல்சிஐ குறித்து சு. வெங்கடேசன் எம்.பி.

11th Feb 2022 12:43 PM

ADVERTISEMENT


எல்ஐசி கொடுப்பதாகச் சொன்ன கடன் தொகையை மத்திய அரசு பயன்படுத்தவில்லை. ஆனால், எல்ஐசியை விற்பதற்கு விடாமல் முயற்சிக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கூறியுள்ளார்.

மேலும், தங்க முட்டையிடும் வாத்தை வளர்க்கத் தெரியவில்லையே! இவ்வளவு அரசின் திட்டங்களுக்கு துணை நிற்கும் ஒரு நிறுவனத்தை பங்கு விற்பனைக்கு ஆளாக்குவது என்ன நியாயம்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிக்க.. திருப்பூர்: சூட்கேஸில் பெண் சடலம் இருந்த வழக்கில் துப்பு துலங்கியது எப்படி?

ADVERTISEMENT

இது குறித்து சு. வெங்கடேசன் எம்.பி. தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இந்திய இரயில்வேக்கு எல்ஐசி தருவதாக சொன்ன கடன் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினை கூட அரசு பயன்படுத்தவில்லை. ஆனால் எல்ஐசி பங்குகளை விற்பதற்கு மட்டும் விடாது முயற்சிக்கிறது.

தங்க முட்டையிடும் வாத்தினை வளர்க்க தெரியாதவன், அறுப்பதற்கே அவசரம் காட்டுவான் என்பது மத்திய அரசுக்கே பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT