தமிழ்நாடு

தம்மம்பட்டி அருகே ஆக்கிரமிக்கப்பட்ட ஏரி நிலம் மீட்பு

11th Feb 2022 12:18 PM

ADVERTISEMENT

தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த, ஏரி நிலத்தை கெங்கவல்லி தாசில்தார் தலைமையிலான வருவாய்த்துறையினர் மீட்டனர்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே கொண்டயம்பள்ளி கிராமத்தில் உள்ள ஏரி நிலத்தில் அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன்கள் ரங்கநாதன், தங்கதுரை, மற்றும் தங்கவேல் மகன்கள் ரகு, இந்திரன் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கெங்கவல்லி வருவாய்த்துறைக்கு புகார் சென்றது.

அதையடுத்து, கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன் தலைமையிலான, வருவாய்த்துறையினர் மற்றும்  பொதுபணித்துறை அதிகாரிகள் ஜே.சி.பி. இயந்திரத்துடன் சென்று ஆக்கிரமிப்பை அகற்றினர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT