தமிழ்நாடு

வேதாரண்யம் கடலோரப் பகுதியில் கனமழை: உப்பு உற்பத்தி, நெல் அறுவடைப் பணி பாதிப்பு

11th Feb 2022 12:11 PM

ADVERTISEMENT

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதி கடலோரக் கிராமங்களில் இரண்டாவது நாளாக இன்றும் ( பிப்.11) தொடர் கனமழை பெய்து வருகிறது.

காற்று சுழற்சி காரணமாக கடலோரப் பகுதியில் மழைப் பொழிவு இருப்பதால் உப்பு உற்பத்தி, நெல் அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

வேதாரண்யம் பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் முதல் ஏற்பட்ட மழைப் பொழிவு வெள்ளிக்கிழமையும் தொடர்கிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி வேதாரண்யத்தில் 69.6 மி.மீ, தலைஞாயிறு 23.2 மி.மீ,  கோடியக்கரையில் 80 மி.மீ மழை பதிவானது.

வேதாரண்யம் பகுதியில் கனமழை தொடர்வதால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT