தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ.44.25 லட்சம் தங்கம் பறிமுதல்

11th Feb 2022 06:19 PM

ADVERTISEMENT

சென்னை விமான நிலையத்தில் ரூ.44.25 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 

சென்னையைச் சேர்ந்த முகமது யாசர் அராபத் (வயது32) என்ற பயணி துபையிலிருந்து இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தார்.

அவரை இடைமறித்து சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது, உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்து தைக்கப்பட்டிருந்த 990 கிராம் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. 

அதன் மதிப்பு ரூ.44.25 லட்சமாகும். அந்த தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT