தமிழ்நாடு

கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 67 ஆயிரமாக குறைவு

11th Feb 2022 02:28 AM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 70 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அதன்படி, மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 66,992-ஆக இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் புதிதாக கரோனா தொற்றுக்குள்ளானவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 3,592 -ஆக குறைந்துள்ளது.

அதில் அதிகபட்சமாக சென்னையில் 663 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 654 பேரும், செங்கல்பட்டில் 290 பேரும், திருப்பூரில் 221 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

மற்றொருபுறம் கரோனா தொற்றிலிருந்து மேலும் 14,182 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வியாழக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 33,23,214-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 25 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,862-ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT