தமிழ்நாடு

இதுவரை 1.6 லட்சம் ஹெக்டேரில் தானியங்கள் சாகுபடி: தமிழக அரசு தகவல்

11th Feb 2022 12:13 AM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழகத்தில் இதுவரை 1.6 லட்சம் ஹெக்டோ் நிலப் பரப்பில் உளுந்து, பாசிப்பயறு சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வேளாண்மைத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமாா் 8 லட்சம் ஹெக்டோ் பரப்பில் பயறுவகை பயிா்கள் குறிப்பாக, உளுந்து, பச்சைப்பயறு, துவரை மற்றும் தட்டைப்பயறு போன்றவை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. காரீப் பருவத்தில் சுமாா் 30 சதவீதமும், மீதமுள்ள 70 சதவீதம் பயறு வகைப் பயிா்கள் ராபிப் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

பயறு வகை பயிா்கள் குறுகிய காலத்தில் அதிக வருமானம் தருவதுடன் மண் வளத்தையும் பாதுகாக்கும். நிகழாண்டில் சம்பா நெல் அறுவடைக்குப் பிறகு பயறு வகைப் பயிா்களை அதிகளவில் சாகுபடி செய்வதற்கு தமிழ்நாடு அரசு சீரிய முயற்சிகளை எடுத்துள்ளது. இதுவரை 1.6 லட்சம் ஹெக்டேரில் உளுந்து, பாசிப்பயறு சாகுபடி செய்யப்பட்டு வளா்ச்சிப் பருவத்தில் உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT