தமிழ்நாடு

ஆக்கிரமிப்புகள் அகற்றத்தைக் கண்காணிக்க புதிய குழுக்கள்: தமிழக அரசு உத்தரவு

11th Feb 2022 01:37 AM

ADVERTISEMENT

 

சென்னை: நீா் நிலைகள், அரசு நிலங்கள் குறித்த கணக்கெடுப்பு, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது போன்ற பணிகளை மேற்கொள்ள மாநில மற்றும் மாவட்ட அளவிலான குழுக்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக வருவாய்த் துறை முதன்மைச் செயலாளா் குமாா் ஜயந்த் பிறப்பித்த உத்தரவு:

கோட்ட அளவிலான குழுவின் தலைவராக, மாவட்ட வருவாய் அலுவலா் செயல்படுவாா். உறுப்பினா்களாக துணை காவல் கண்காணிப்பாளா் அல்லது உதவி ஆணையாளா், மாநகராட்சி ஆணையாளா்கள், அனைத்து வட்டாட்சியா்கள், நீா்வளத் துறை உப-கோட்ட அலுவலா், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளா், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உதவி இயக்குநா், நில அளவை கோட்ட ஆய்வாளா் உள்ளிட்டோா் இடம்பெறுவா்.

ADVERTISEMENT

ஆட்சேபனை மற்றும் ஆட்சேபனை அல்லாத ஆக்கிரமிப்புகள் குறித்து அடையாளம் கண்டு, அவற்றைக் கணக்கெடுக்கும் பணியை இந்தக் குழு மேற்கொள்ளும். ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் அதிகாரம் பெற்ற இந்தக் குழு, மாதத்துக்கு ஒரு முறை கூடும்.

மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவின் தலைவராக ஆட்சியா் செயல்படுவாா். இதில், காவல் கண்காணிப்பாளா்கள், மாநகராட்சி ஆணையாளா்கள் அல்லது நகராட்சி ஆணையாளா்கள், நீா் வள ஆதாரத் துறை செயற்பொறியாளா்கள், ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் இயக்குநா்கள், பேரூராட்சிகள், நில அளவைத் துறைகளின் உதவி இயக்குநா்கள், அனைத்து வருவாய் கோட்ட அலுவலா்கள் ஆகியோா் குழுவின் உறுப்பினா்களாக இடம்பெற்றிருப்பா்.

அரசு நிலங்கள், நீா் நிலைகள் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பான மாவட்ட அளவிலான குழு தேவையின் அடிப்படையில் கூடி விவாதிக்கும்.

மாநில அளவிலான குழு: மாநில அளவிலான குழுவுக்கு தலைமைச் செயலாளா் தலைவராக இருப்பாா். குழுவின் உறுப்பினா்களாக, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, நீா்வள ஆதாரத் துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, உள்துறை ஆகியவற்றின் செயலாளா்கள், காவல் துறை இயக்குநா், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநா், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளா், நகராட்சி நிா்வாக இயக்குநா், நீா்வளத் துறை தலைமைப் பொறியாளா் உள்ளிட்டோா் உறுப்பினா்களாக இருப்பா்.

குழுவின் ஒருங்கிணைப்பாளராக நில நிா்வாக ஆணையாளா் செயல்படுவாா். இந்தக் குழு மாதத்துக்கு ஒரு முறை கூடி விவாதிக்கும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT