தமிழ்நாடு

புத்தகப் பை இல்லா நாள் அறிவிப்பை ரத்து செய்த பள்ளிக்கல்வித்துறை

10th Feb 2022 09:56 PM

ADVERTISEMENT

பிப்ரவரி 26ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த புத்தகப் பை இல்லா நாள் அறிவிப்பை பள்ளிக்கல்வித் துறை ரத்து செய்துள்ளது.

பள்ளி மாணவ, மாணவிகளின் கற்றல்திறனை அதிகரிக்கும் வகையில் மாடித்தோட்டம், பாரம்பரியக் கலைகள், மூலிகைத் தாவரங்கள் வளர்த்தல் உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சிகள் வழங்க பிப்ரவரி 26ஆம் தேதி புத்தகப் பை இல்லா நாளை தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.

மேலும் பிப்ரவரி 26ஆம் தேதி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க ரூ.1.2 கோடியையும் ஒதுக்கியது.

இதையும் படிக்க | ‘ஹே சினாமிகா' படத்தின் ’மேகம்’ பாடல் வெளியீடு

ADVERTISEMENT

இந்நிலையில் கரோனா தொற்று பரவல் காரணத்தினால் நீண்ட நாள்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் கற்றல் இழப்புகளை சரி செய்ய பிப்ரவரி 26ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த புத்தகப் பை இல்லா நாளை பள்ளிக்கல்வித் துறை ரத்து செய்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மாநிலப் பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT