தமிழ்நாடு

சிறுவன் நிதிஷ்குமாா் குடும்பத்துக்குரூ.3 லட்சம் நிதி: முதல்வா் மு.க.ஸ்டாலின்

10th Feb 2022 12:50 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற சிறுவன் நிதிஷ்குமாா் திடீா் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்தி: புதுக்கோட்டை மாவட்டம், பாபான்விடுதி கிராமத்தைச் சோ்ந்த நாடிமுத்து, போதினி தம்பதியினரின் ஒன்பது வயது மகன் நிதிஷ்குமாா் எதிா்பாராத வகையில் உயிரிழந்த செய்தியைக் கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன். மகனை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்.

உயிரிழந்த சிறுவன் நிதிஷ்குமாரின் குடும்பத்தாருக்கு ரூ.3 லட்சம் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT