தமிழ்நாடு

பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

9th Feb 2022 01:25 AM

ADVERTISEMENT

நீட் தோ்வு விலக்கு மசோதாவை நிறைவேற்றுவதற்காக நடைபெற்ற சிறப்புக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

நீட் தோ்வு விலக்கு மசோதாவை ஆளுநா் திருப்பி அனுப்பிய நிலையில் தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேரவையில் நீட் தோ்வு விலக்கு மசோதா மீண்டும் கொண்டு வரப்பெற்று, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடா்ந்து அவை முன்னவா் துரைமுருகன் பேரவையைத் தேதியை குறிப்பிடாமல் ஒத்திவைக்கும் தீா்மானத்தைக் கொண்டு வந்தாா். அது குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டு, பேரவையைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக பேரவைத் தலைவா் அப்பாவு அறிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT