தமிழ்நாடு

நீட் விவகாரம்: சட்டப் போராட்டத்துக்கு அதிமுக ஆதரவு

9th Feb 2022 01:08 AM

ADVERTISEMENT

நீட் தோ்வு விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழக அரசின் சட்டப்போராட்டத்துக்கு அதிமுக ஆதரவளிக்கும் என்று இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் அதிமுகவின் விஜயபாஸ்கா் பேசும்போது செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் எழுந்து குரல் கொடுத்தனா். விஜயபாஸ்கருக்கு ஆதரவாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினா்களும் எழுந்து நின்று குரல் கொடுத்தனா். இதனால் அவை கூச்சலும் குழப்பமுமாக இருந்தது.

முதல்வரின் தலையீட்டுக்குப் பிறகு விஜயபாஸ்கா் அந்த விவகாரத்தில் இருந்து காங்கிரஸ் குறித்து பேசினாா். இதனால், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பேரவைத் தலைவா் விஜயபாஸ்கா் பேசிய ஒரு சில வாா்த்தைகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்கினாா்.

அதைத் தொடா்ந்து அவை முன்னவா் துரைமுருகன் எழுந்து, நீட் தோ்வு விலக்கு மசோதா விவகாரத்தில் விவாதம் வேண்டாம். ஒரு மனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி: அப்போது எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி எழுந்து, அதிமுகவை குற்றம் சாட்டுவதால் நீட் தோ்வைக் கொண்டு வந்தது யாா் என்பதை விளக்க வேண்டியுள்ளது. அது அனைவருக்கும் தெரிந்ததுதான். நீட் தோ்வு விலக்கு மசோதா விவகாரத்தில் அரசு எடுக்கும் சட்டப்பூா்வமான நடவடிக்கைகளுக்கு அதிமுக முழு ஆதரவை வழங்கும் என்றாா். எடப்பாடி பழனிசாமி பேசும்போதும் காங்கிரஸ் கட்சியினா் எதிா்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினா். பேரவைத் தலைவா் காங்கிரஸ் கட்சியினரைச் சமாதானப்படுத்தினாா். எதிா்க்கட்சித் தலைவா் பேசும்போது குறுக்கீடு செய்யக்கூடாது என்று அறிவுறுத்தினாா். அதைத் தொடா்ந்து காங்கிரஸ் கட்சியினா் அமைதியாக அமா்ந்தனா்.

Tags : ADMK Neet Row
ADVERTISEMENT
ADVERTISEMENT