தமிழ்நாடு

அவிநாசி அருகே விசைத்தறிக் கூடங்களில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

2nd Feb 2022 10:43 AM

ADVERTISEMENT


அவிநாசி: கூலி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி தெக்கலூரில் விசைத்தறியாளர்கள் கூடங்கள், வீடுகளில், புதன்கிழமை கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கூலி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறத்தி,  திருப்பூர், கோவை மாவட்ட உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துபடி, விசைத்தறியாளர்கள் ஜன.9ஆம் தேதி முதல், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இதுவரை  எவ்விதமான தீர்வும் ஏற்படாததால், பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இதன் தொடர்ச்சியாக தெக்கலூர் பகுதி முழுவதும்  உள்ள விசைத்தறி கூடங்கள், வீடுகள், தொழிலாளர்கள் தங்கும் இடம் உள்ளிட்டவற்றில் விசைத்தறியாளர்கள் கருப்புக்கொடி ஏற்றி தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் குதிரைமீது விசைத்தறியாளர்கள் அமர்ந்து வீதிவீதியாக சென்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT