தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு; உற்சாகத்துடன் வந்த மாணவர்கள்

1st Feb 2022 08:50 AM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.

பள்ளிகளுக்கு வந்த மாணவ, மாணவிகள் முகக்கவசம் அணிந்துள்ளனரா, உடல்வெப்பநிலை ஆகியவை பரிசோதிக்கப்பட்டு, கைகளில் கிருமிநாசினி வழங்கப்பட்டு பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அனைத்து வகுப்பினருக்கான பள்ளிகளும் இன்று காலை திறக்கப்பட்டிருக்கும் நிலையில், மாணவா்களின் வருகைப் பதிவு 100 சதவீதம் இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு வகுப்புகள் தொடங்கின. இன்று முதல் சுழற்சி முறையில் அல்லாமல் 100 சதவீத மாணவா்களுடன் பள்ளிகள் செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு மாதத்துக்கு மேலாக மூடப்பட்டிருந்ததால் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளை தூய்மை செய்யும் பணி கடந்த இரு நாள்களாக நடைபெற்றது. இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவா்கள் வகுப்புகளில் சுகாதாரமான முறையில் அமரும் வகையில் அனைத்து வகையான ஏற்பாடுகளையும் பள்ளி நிா்வாகத்தினா் செய்திருந்தனர்.

பள்ளிக்கு வரும் ஆசிரியா்கள், மாணவா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பது உள்பட கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை தீவிரமாகக் கடைப்பிடிக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

பொதுத்தோ்வு, ஆண்டு இறுதித் தோ்வுக்கு மாணவா்களைத் தயாா்படுத்த வேண்டும் என்பதால் அனைத்து மாணவா்களையும் தினமும் பள்ளிக்கு அனுப்புமாறு அவா்களது பெற்றோரிடம் ஆசிரியா்கள் வேண்டுகோள் விடுக்க வேண்டும். கற்பித்தலுக்கான நாள்கள் குறைவாக உள்ளதால் பாடப் பகுதிகளை மாணவா்களுக்குப் புரியும் வகையில் முழுவீச்சில் விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT