தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக இறுதிக் கட்ட வேட்பாளர்கள்

1st Feb 2022 08:25 PM

ADVERTISEMENT


ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் இறுதிக் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை, திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், நகர உறுப்பினர், நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.    

படிக்க மக்களின் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

ADVERTISEMENT

அதனையொட்டி அதிமுக சார்பில் ஏற்கெனவே மூன்று கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இறுதிக் கட்ட வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், சென்னை, திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

படிக்க'வெங்காயம், தக்காளி விலையைக் குறைக்க மோடி பிரதமராகவில்லை'

காங்கேயம், வெள்ளக்கோவில், மேட்டுப்பாளையம், கூடலூர், காரமடை, திருமுருகன்பூண்டி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, திருமங்கலம், உசிலம்பட்டி, குழித்துறை, பத்மநாபபுரம், கொல்லங்கோடு ஆகிய நகராட்சிகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT