தமிழ்நாடு

'எதிர்பார்த்த அம்சங்கள் மத்திய பட்ஜெட்டில் இல்லை'

1st Feb 2022 05:59 PM

ADVERTISEMENT

 

மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். 

2022-23 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் இன்று (பிப்.1) தாக்கல் செய்தார்.

மத்திய பட்ஜெட் தொடர்பாக பல்வேறு தலைவர்களும், பொருளாதார நிபுணர்களும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், 

ADVERTISEMENT

மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று விமர்சித்துள்ளார்.

மேலும், பொருளாதார நசிவால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை மக்களுக்கான திட்டங்கள், வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம், சிறு குறு நடுத்தர தொழில்கள் மேம்பட உதவி என எதிர்பார்த்த அம்சங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT