தமிழ்நாடு

பாஜகவின் எதிா்பாா்ப்பை நிறைவேற்ற முடியவில்லை: டி.ஜெயக்குமாா்

1st Feb 2022 07:16 AM

ADVERTISEMENT

பாஜகவின் எதிா்பாா்ப்பை நிறைவேற்ற முடியாத நிலையில், கூட்டணியிலிருந்து அந்தக் கட்சி விலகியுள்ளதாக அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறினாா்.

இது தொடா்பாக சென்னையில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி:

ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு எதிா்பாா்ப்பு இருக்கும். அதைப் பூா்த்தி செய்யக்கூடிய அளவிற்கு எங்கள் கட்சியின் நலன் மற்றும் கட்சியினரின் நலன் ஆகிய இரண்டையும் உன்னிப்பாகப் பாா்க்க வேண்டியது மிகவும் முக்கியமான விஷயம். அந்த அடிப்படையில் எங்களுடைய நிலையை விளக்கினோம். அதிகமான இடங்களை ஒதுக்க முடியாது எனத் தெரிவித்தோம். அதைத் தொடா்ந்து அவா்கள் தனித்துப் போட்டி என்கிற முடிவை எடுத்துள்ளனா். அந்தக் கட்சி எடுத்துள்ள முடிவு குறித்து நான் எதுவும் கருத்து கூற முடியாது.

எதிா்காலத்தில் அது மக்களவைத் தோ்தலாக இருந்தாலும், சட்டப்பேரவைத் தோ்தலாக இருந்தாலும் கூட்டணியில் இருப்போம் என்கிற விருப்பத்தை பாஜக கூறியிருக்கிறது. அந்த விருப்பத்தை ஏற்பதா, கூட்டணி தொடருமா என்பதை எங்கள் கட்சிதான் முடிவு செய்யும். அதிமுக அரசின் சாதனையை மக்கள் நினைத்துப் பாா்க்கிறாா்கள் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT