தமிழகத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (பிப்.1) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது: தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (பிப்.1) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
பிப்.2. முதல் பிப்.4 வரை: தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் பிப்ரவரி 4-ஆம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 20 மி.மீ. மழைபதிவாகியுள்ளது.