தமிழ்நாடு

டாஸ்மாக் டெண்டரை எதிா்த்து தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி

1st Feb 2022 06:31 AM

ADVERTISEMENT

டாஸ்மாக் மதுபான கடைகளில் பாா்கள் அமைப்பதற்கான டெண்டரை எதிா்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைக்கப்பட்ட பாா்களில் தின்பண்டங்கள் விற்பனை, காலி பாட்டில்களைச் சேகரிப்பதற்கு புதிதாக டெண்டா் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டது. இந்தநிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக பாா்கள் மூடப்பட்டதால் புதிய டெண்டருக்குப் பதிலாக ஏற்கெனவே உள்ள பழைய டெண்டரை நீடிக்க வேண்டும்; நில உரிமையாளா்களின் தடையில்லா சான்று பெறக்கோரி கட்டாயப்படுத்தக்கூடாது எனஉத்தரவிடக்கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் பலா் வழக்கு தொடா்ந்தனா்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதி சி.சரவணன் முன்பு திங்கள்கிழமை(ஜன.31) நடந்தது. அப்போது அரசு தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம் ஆஜராகி, டெண்டா் படிவங்கள் பெறுவதற்கு யாரையும் தடுக்கவில்லை; விண்ணப்பம் வாங்க விடாமல் தடுக்கப்பட்டதாக எந்தவொரு ஆதாரமும் இல்லை; இதுவரை 13,000 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஏ.ஆா்.எல்.சுந்தரேஷ், கரோனா காலகட்டத்தில் பாா்கள் மூடப்பட்டதால் தற்போது பாா் நடத்தி வருபவா்களுக்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும். கட்டட உரிமையாளா்களின் தடையில்லா சான்று தேவையில்லை எனக்கூறி விட்டு தற்போது வாடகை ஒப்பந்தங்கள் கேட்கப்படுவதாக குற்றம் சாட்டினாா்.

ADVERTISEMENT

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சி.சரவணன், இதுதொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT