தமிழ்நாடு

திமுக முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை செய்யப்பட்டது அம்பலம்: உறவினர்கள் 5 பேர் கைது!

30th Dec 2022 12:08 PM

ADVERTISEMENT

மாநில சிறுபான்மையினர் நல ஆணைய துணைத் தலைவரும், திமுக முன்னாள் எம்பியுமான மஸ்தான் கொலை செய்யப்பட்டது போலீசாரின் தொடர் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. 

திமுக முன்னாள் எம்பியும், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணைய துணைத் தலைவரும், திமுக சிறுபான்மையினா் நல உரிமை பிரிவுச் செயலாளராக இருந்த டாக்டா் மஸ்தான் (66). இவர் குடும்பத்துடன் சென்னை சேப்பாக்கத்தில் வசித்து வந்தாா்.

கடந்த வியாழக்கிழமை(டிச.22) காலை சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது, திடீரென அவருக்கு நெஞ்சுவலி வலிப்பு ஏற்பட்டதை அடுத்து அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

ஆனால், அவரது குடும்பத்தினர் மஸ்தான் மறைவில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து மஸ்தான் மறைவை சந்தேக மரணமாக ஊரப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

ADVERTISEMENT

நெஞ்சுவலி வலிப்பால் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் மஸ்தான் மறைவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மஸ்தான் சந்தேக மரண வழக்கு விசாரணையில், அவரது சகோதரரின் மருமகன், கார் ஓட்டுநர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது விசாரித்ததில் அதிர்ச்சி தகவல் வெளியானது. விசாரணையில், மஸ்தான் உறவினர்களால் கொலை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது. 

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

விரைவில் கொலைக்கான உண்மை காரணங்கள் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT