தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் பகல் பத்து 8ம் நாள் உற்சவம்!

30th Dec 2022 11:02 AM

ADVERTISEMENT

 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் பகல் பத்து எட்டாம் நாளான வெள்ளிக்கிழமை மூலஸ்தானத்தில் இருந்து ஸ்ரீ நம்பெருமாள் எழுந்தருளியனார்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பகல்பத்து விழா கடந்த வியாழக்கிழமை இரவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

ADVERTISEMENT

இந்நிலையில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாகதசி பகல் பத்து எட்டாம் நாளான வெள்ளிக்கிழமை அர்ச்சுன மண்டபத்தில்   முத்து சாய் கொண்டை, வைர காதுகாப்பு, வைரஅபயஹஸ்தம், புஜகீர்த்தி, அர்த்த சந்திரா, ரத்தின லட்சுமி பதக்கம், பவள மாலை,  இரண்டு வட முத்துமாலை,

 

அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் ஸ்ரீ நம்பெருமாள்.

 

பகல்பத்தின் கடைசி நாளான ஜனவரி 1 ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி தருகிறாா். அதனைத் தொடா்ந்து இராப்பத்து விழாவின் முதல் நாளான 2 ஆம் தேதி முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு நடைபெறவுள்ளது.

 

சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு வருகிற 2-ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் மா.பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT