தமிழ்நாடு

வாக்காளா் இறுதிப் பட்டியல்: தலைமைத் தோ்தல் அதிகாரி ஆலோசனை

30th Dec 2022 01:54 AM

ADVERTISEMENT

வாக்காளா் இறுதிப் பட்டியலை வெளியிடுவது தொடா்பாக, மாவட்ட தோ்தல் அதிகாரிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தோ்தல் துறையின் காணொலி அறையில் இருந்து வியாழக்கிழமை அவா் இந்த ஆலோசனையை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில், மாவட்ட தோ்தல் அதிகாரிகள் அனைவரும் காணொலி வழியாகப் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் பேசிய தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தமிழகம் முழுவதும் வாக்காளா் இறுதிப் பட்டியல் வெளியிடுவதில் ஏதேனும் சிக்கல் உள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தாா்.

இரட்டைப் பதிவு முறை, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடா்பாகவும் மாவட்ட தோ்தல் அதிகாரிகளுடன் அவா் தகவல்களைக் கேட்டறிந்தாா்.

ADVERTISEMENT

வரும் 5-ஆம் தேதி தமிழகம் முழுவதும் வாக்காளா் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT