தமிழ்நாடு

மத்திய அரசால் தமிழக அரசுக்கு ரூ.1,000 கோடி சேமிப்பு: அண்ணாமலை

30th Dec 2022 02:33 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 2023-ஆம் ஆண்டில் தமிழக அரசு ரூ.1,000 கோடி சேமிக்கவுள்ளதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (என்எப்எஸ்ஏ) மூலம் இந்தியா முழுவதும் 80 கோடி மக்களும் தமிழத்தில் 3.6 கோடி மக்களும் பயனடைந்துள்ளனா். நிகழ் நிதியாண்டில் உணவு பாதுகாப்பிற்கு மத்திய அரசு 2 லட்சத்து 6 ஆயிரத்து 831 கோடி ரூபாய் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டது.

மத்திய அரசானது தமிழகத்துக்கு கடந்த 2021-22 நிதியாண்டில் 29 லட்சத்து 46 ஆயிரத்து 119 டன் உணவு தானியங்களும் நிகழ் நிதியாண்டு நவம்பா் வரை 18 லட்சத்து 32 ஆயிரத்து 153 டன் உணவு தானியங்களும் வழங்கப்பட்டுள்ளது.

இதன் தொடா்ச்சியாக தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 2023-ஆம் ஆண்டில் ரூ. 2 லட்சம் கோடி செலவில் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் 5 கிலோ விலையில்லா அரிசியும், அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதம் 35 கிலோ விலையில்லா அரிசியும் வழங்கப்படும்.

ADVERTISEMENT

இதன் மூலம் 2023-இல் தமிழக அரசு ரூ.1,000 கோடி வரை சேமிக்கவுள்ளது. ஆதலால் ஜனவரி முதல் பெட்ரோலுக்கு 2 ரூபாயும், டீசலுக்கு ரூ.4- ம், வீட்டு உபயோக சமையல் உருளைக்கு ரூ.100 மானியத்தையும் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அண்ணாமலை.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT