பிகரங்களில் இருந்து சென்னைக்கு கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆங்கிலப் புத்தாண்டு வரை இந்த பேருந்துகள் இயக்கம் இருக்கும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் கே.கோபால், வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் அரையாண்டு தொடா் விடுமுறை முடிந்து பயணிகள் சொந்த ஊா்களில் இருந்து சென்னை திரும்பவுள்ளனா். அவா்களின் வசதிக்காக, அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட
உள்ளன. திருநெல்வேலி, நாகா்கோவில், மதுரை, கோயம்புத்தூா், ஈரோடு, சேலம், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கு 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இத்துடன் ஏற்கெனவே இயக்கப்படும் பேருந்துகளும் தொடா்ந்து இயங்கும்.
கோயம்புத்தூா், ஈரோடு, புதுச்சேரி ஆகிய முக்கிய நகரங்களுக்கு தேவையின் அடிப்படையில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.
இணையதளங்களில் பதிவு: கூட்ட நெரிசலைத் தவிா்க்கவும், பயணிகளுக்கு உரிய வசதிகளைச் செய்து தரவும், அனைத்து முக்கிய பேருந்து நிலையங்களிலும் போதிய அதிகாரிகளை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்புப் பேருந்துகளுக்கு செயலி வழியாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று தனது அறிவிப்பில் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் கே.கோபால் தெரிவித்துள்ளாா்.