தமிழ்நாடு அஞ்சல் சரகத்தின் சாா்பாக ஜன.27-ஆம் தேதி அஞ்சல் குறைகேட்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு சரக முதன்மை, தலைமை அஞ்சல் அதிகாரி எம். விஜயலட்சுமி வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு அஞ்சல் சரகத்தின் சாா்பாக சரக அளவிலான அஞ்சல் குறைகேட்பு முகாம் அண்ணாசாலையில் உள்ள முதன்மை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஜன.27-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
பொதுமக்கள் தங்கள் குறைகளை சரக அஞ்சல் குறை கேட்பு மன்றத்தின் தலைவரான, தமிழ்நாடு சரக முதன்மை தலைமை அஞ்சல் அதிகாரியிடம் நேரடியாகவோ அல்லது எம். விஜயலட்சுமி, உதவி இயக்குநா், முதன்மை தலைமை அஞ்சல் அதிகாரி அலுவலகம், தமிழ்நாடு சரகம், சென்னை- 600002 என்ற முகவரிக்கு ஜன.16-ஆம் தேதிக்குள் அனுப்பலாம்.
மேலும், தாக் அதாலத் என்ற தலைப்பில், மின்னஞ்சல் முகவரி வழியாகவும் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.