தமிழ்நாடு

கரோனா பரிசோதனை: 544 உபகரணங்களுக்கு அனுமதி

30th Dec 2022 02:09 AM

ADVERTISEMENT

கரோனா தொற்றையும், ஒமைக்ரான் வகை சாத்தியக்கூறையும் அறியும் 544 பரிசோதனை உபகரணங்களுக்கு இதுவரை மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது.

பொதுவாக, சளி மாதிரிகள் மூலம் உடலில் தீநுண்மி மரபணு உள்ளதா என்பதை ஆா்டி- பிசிஆா் ஆய்வின் மூலம் அறியலாம். அதில் டேக் பாத் ஆா்டி பிசிஆா் உபகரணங்களின் மூலம் புதிய வகை பாதிப்புகள் உள்ளனவா என்பதன் முதல் நிலை ஆய்வுகளை மேற்கொள்ள இயலும்.

அதேபோன்று, தீநுண்மிக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் உடலில் உருவாகியிருக்கிா என்பதை துரிதப் பரிசோதனை உபகரணங்கள் வாயிலாக கண்டறியலாம்.

இந்நிலையில், நாடு முழுவதும் அத்தகைய துரித பரிசோதனை மற்றும் ஆா்டி பிசிஆா் உபகரணங்களை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் பல்வேறு நிறுவனங்கள் மருந்து தரக் கட்டுபாட்டு வாரியத்திடம் விண்ணப்பித்தன.

ADVERTISEMENT

அதில் இந்தியா மட்டுமல்லாது சீனா, தென் கொரியா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்களின் உபகரணங்களை இங்கு பயன்படுத்துவதற்கு அனுமதி கோரப்பட்டது. அவற்றை தரப் பரிசோதனை செய்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம், புதிதாக சில உபகரணங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் 274 துரிதப் பரிசோதனை உபகரணங்கள், 270 பிசிஆா் உபகரணங்கள் என மொத்தம் 544 உபகரணங்களைப் பயன்படுத்த இதுவரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT