தமிழ்நாடு

சென்னையில் 3-வது நாளாக உண்ணாவிரதம்: 40 ஆசிரியர்கள் மயக்கம்

29th Dec 2022 08:23 AM

ADVERTISEMENT

ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி சென்னையில் மூன்றாவது நாளாக இடைநிலை ஆசிரியா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடா்ந்து வரும் நிலையில், 40 பேர் மயக்கமடைந்ததால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

தமிழகத்தில், 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும், இதற்கு முந்தைய மாதத்தில் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும் அடிப்படை ஊதிய முரண்பாடு உள்ளது.

இந்த முரண்பாட்டை நீக்கி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியா்கள், குடும்பத்துடன், செவ்வாய்க்கிழமை முதல் தொடா் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து வரும் நிலையில், 40-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம் ஏற்பட்டு கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனா். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT