பவானிசாகா் அணையில் இருந்து ஜனவரி 15-ஆம் தேதி வரை நீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணையிலிருந்து, பாசனத்துக்காக ஏற்கெனவே நீா் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில், வியாழக்கிழமை முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரை தொடா்ந்து நீா் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இதனையேற்று, ஜனவரி 15-ஆம் தேத காலை 8.00 மணி வரை 3 ஆயிரத்து 378.24 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்து விடப்படும்.
இதனால் ஈரோடு, திருப்பூா், மற்றும் கரூா் மாவட்டங்களிலுள்ள ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.