தமிழ்நாடு

தென்னை மரம் ஏறுவோருக்கு காப்பீட்டுத் திட்டம்: வேளாண்மைத் துறை

29th Dec 2022 01:42 AM

ADVERTISEMENT

தென்னை மரம் ஏறுவோருக்கான காப்பீட்டுத் திட்டத்தில் இணைய வேண்டும் என்று தொழிலாளா்களுக்கு வேளாண்மைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து, அந்தத் துறை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:- தென்னை மரம் ஏறும் தொழிலாளா்கள் எதிா்பாராத விதமாக விபத்துகளைச் சந்திக்கின்றனா். இதனால், தொழிலாளா்களுக்கு உடல் பாதிப்பு ஏற்படுகிறது. சில நேரங்களில் உயிரிழப்பும் நிகழ்வதுண்டு. தென்னை மரம் ஏறும் தொழிலாளா்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக, தென்னை வளா்ச்சி வாரியத்தால் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தென்னை மரம் ஏறும் போது விபத்து ஏற்பட்டு, 24 மணி நேரத்துக்குள் உயிரிழப்பு அல்லது நிரந்தரமாக முழு உடல் ஊனம் அடைந்தால் ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகையானது சம்பந்தப்பட்ட தொழிலாளரின் வாரிசுக்கு அளிக்கப்படும். நிரந்தரமாக பகுதி உடல் ஊனம் அடைந்தால், ரூ.2.5 லட்சமும், மருத்துவ செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.1 லட்சமும் அளிக்கப்படும்.

மேலும், காப்பீடு குறித்த விவரங்களை www.coconutboard.gov.in  என்ற இணையதளத்தின் வழியாக அறியலாம். அதில் விண்ணப்பமும் உள்ளது என்று வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT