தமிழ்நாடு

பழநி கோயிலில் நாளை ரோப் கார் சேவை இயங்காது!

18th Dec 2022 08:22 PM

ADVERTISEMENTதிண்டுக்கல்: பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கம்பிவட ஊர்தி (ரோப் கார்) சேவை திங்கள்கிழமை (டிச.19) ஒரு நாள் மட்டும் இயங்காது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான இந்த கோயிலில் முருகப் பெருமான் ஆண்டி கோலத்தில் காட்சியளிக்கிறார். 

இதையும் படிக்க | ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: செரிமானம் விரைவில் ஏற்பட...?

இந்த கோயிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி சென்று வருவதற்காக கம்பிவட ஊர்தி (ரோப் கார்) சேவைகள் செய்யப்பட்டுள்ளன. அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் ரோப் கார் சேவை ராக்கால பூஜை வரை தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. மழை காரணமாக ரோப் காப் சேவை தடைப்படும். 

ADVERTISEMENT

இந்நிலையில், மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை திங்கள்கிழமை (டிச.19) ஒரு நாள் மட்டும் இயங்காது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT