சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்ததால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 21 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது.
இதனால் நேற்று இரவு திறக்கப்பட்ட உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் மீண்டும் மூடப்பட்டன.
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தற்போது 21,000 கனஅடியாக சரிந்தது. இன்று காலை 24,100 கனஅடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து தற்போது 21,600 கனஅடி என்ற அளவில் வந்து கொண்டிருக்கிறது.
நீர் மின் நிலையங்கள் வழியாக 21,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் வழியாக 600 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது.