தமிழ்நாடு

சுற்றுச்சூழல் அனுமதி: ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் ரத்து!

14th Dec 2022 03:24 PM

ADVERTISEMENT

சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டுமானம் மேற்கொண்ட விவகாரத்தில் ஈஷா அறக்கட்டளைக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2006 முதல் 2014- ஆம் ஆண்டு வரை விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, கடந்த 2021, நவம்பா் 19-ஆம் தேதி விதிமீறல் கட்டடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்குத் தொடரக் கூடாது என விளக்கம் கேட்டு, மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ஈஷா அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.

இந்த நோட்டீசுக்கு தடை விதிப்பதோடு, கடந்த 2014-ஆம் ஆண்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் நீட்டிப்பு அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டுமென ஈஷா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையில் இருந்து வருகிறது. 

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற விசாரணையில், ஈஷா அறக்கட்டளை மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக்கூடாது என இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், ஈஷா அறக்கட்டளைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும், 'ஈஷா அறக்கட்டளையை கல்வி நிறுவனமாகவே கருத முடியும். மொத்தமுள்ள 4 லட்சம் சதுரமீட்டர் பரப்பளவில் 1.25 லட்சம் சதுரமீட்டர் பரப்பளவில் கல்வி நிறுவனம் உள்ளதால் விலக்கு  பெற முடியும்' என்று கூறி நோட்டீஸை ரத்து செய்துள்ளது.

இதையும் படிக்க | உண்மையான 'பப்பு' யார்? - வைரலாகும் திரிணமூல் எம்.பி.யின் பேச்சு!

 

ADVERTISEMENT
ADVERTISEMENT