தமிழ்நாடு

குஜராத் முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி... ஓபிஎஸ் பங்கேற்கிறார்?

11th Dec 2022 05:59 PM

ADVERTISEMENT

 

குஜராத் மாநிலத்தின் 18 ஆவது முதல்வராக பூபேந்திர படேல் திங்கள்கிழமை (டிச.12) பதவியேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர். ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் 156 தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. அக்கட்சி சாா்பில் வெற்றி பெற்ற எம்எல்ஏ-க்களின் கூட்டம் காந்திநகரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மூத்த தலைவா்களான ராஜ்நாத் சிங், பி.எஸ்.எடியூரப்பா, அா்ஜுன் முண்டா உள்ளிட்டோா் மத்திய பாா்வையாளா்களாகக் கூட்டத்தில் கலந்துகொண்டனா்.

கூட்டத்தின்போது மாநில சட்டப்பேரவையின் பாஜக குழு தலைவராக பூபேந்திர படேல் ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டார். 

ADVERTISEMENT

பேரவை பாஜக குழு தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட பூபேந்திர படேல், மாநில ஆளுநா் ஆச்சாா்ய தேவ விரத்தை சந்தித்து, மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினாா். மேலும் எம்எல்ஏ-க்களின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் பூபேந்திர படேல் வழங்கினாா். 

இதையும் படிக்க | ஹிமாசல் முதல்வராக பதவியேற்றார் சுக்விந்தா் சிங் சுக்கு

இதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் 18 ஆவது முதல்வராக பூபேந்திர படேல் திங்கள்கிழமை (டிச.12) பதவியேற்கிறார். காந்திநகரில் நடைபெறவுள்ள அந்நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோா் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியானது. 

சமீபத்தில் தில்லி நடைபெற்ற ஜி20 மாநாட்டிற்கான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்து. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அதிருப்பதியில் இருந்தது. இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் அறிக்கையும் விடப்பட்டது. 

இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் 18 ஆவது முதல்வராக பூபேந்திர படேல் திங்கள்கிழமை (டிச.12) பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு முன்னாள் முதல்வர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  

இதையடுத்து பூபேந்திர படேல் பதவிற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை மாலை குஜராத் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT