தமிழ்நாடு

பெருந்துறை அருகே வாய்க்கால் உடைப்பு: 800 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாதிப்பு!

11th Dec 2022 01:07 PM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலில் இரு கரைகளிலும் ஏற்பட்ட உடைப்பால் வெளியேறிய வெள்ள நீரினால் 800 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரை கொண்டு ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் முதல் போக பாசனத்துக்குட்பட்ட கீழ்பவானி வாய்க்காலின் ஒற்றைப்படை மதகுகளுக்கும், சென்னசமுத்திரம் இரட்டைமடை மதகுகளுக்குட்பட்ட பகிர்மான கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் பெருந்துறை அருகே கூறபாளையம் வாய்க்கால் மேடு பகுதியில் அடுத்தடுத்து 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

கடந்த மூன்று மாதத்தில் கரை உடைவது இது 4வது முறை வாய்க்காலில் 1,300 கனஅடி தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இதனால் தண்ணீர் அதிக வேகமாக வெளியேறி அப்பகுதியில் சுமார் 800 ஏக்கரில் பயிரிட்டுள்ள நெல், கரும்பு, வாழை, மஞ்சள் போன்ற பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 12-ம் தேதிக்கு பின் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இதுவரை 4 முறை வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை வாய்க்கால் உடைப்பு ஏற்படும் போதும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

எதிர்பாராத இந்த இடர்பாடு காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT