தமிழ்நாடு

மூன்றாவது குழந்தை பேறுக்காக விடுமுறை கோரி ஆசிரியா் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

DIN

மூன்றாவது குழந்தை பேறுக்காக அரசுப் பள்ளி ஆசிரியருக்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்குவது குறித்து 12 வாரங்களில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியரான கதீஜா உமாமா தனது மூன்றாவது பிரசவத்துக்கு ஓராண்டு காலத்துக்கு விடுப்பு கோரி மாவட்ட கல்வி அதிகாரிக்கு விண்ணப்பித்தாா். விண்ணப்பத்தின் மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசுப் பணியில் உள்ளவா்களுக்கு முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், பணியில் சேருவதற்கு முன்பாகவே இரண்டு குழந்தைகள் பிறந்து விட்டதாகவும், பணியில் சோ்ந்த பின்னரே மூன்றாவது குழந்தைக்கு கருவுற்ால் விடுப்பு பெற தனக்கு உரிமை உள்ளதாகவும் மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரா் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கதீஜாவின் விண்ணப்பத்தைப் பரிசீலித்து ஜூலை 7-ஆம் தேதி முதல் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்குவது குறித்து 12 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

SCROLL FOR NEXT