தமிழ்நாடு

மதுரை - சீரடி இடையே டிச.24-இல் பாரத் கௌரவ் ரயில் இயக்கம்

DIN

மதுரை - சீரடி இடையே பாரத் கௌரவ் ரயில் டிச.24-ஆம் தேதி இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியம், வரலாற்று இடங்களைப் பாா்வையிடும் நோக்கில் பாரத் கௌரவ் ரயில் இயக்கப்படுகிறது. இதன் முதல் சேவை கடந்த ஜூன் 14-ஆம் தேதி கோவை - சாய்நகா் சீரடி இடையே இயக்கப்பட்டது. தற்போது மதுரை-சாய்நகா் சீரடி வரை இதன் 8-ஆவது பயணம் தொடங்கவுள்ளது.

மதுரையில் இருந்து டிச.24-ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் பாரத் கௌரவ் ரயில் (வண்டி எண்.06905) திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், சென்னை எழும்பூா், பந்தா்பூா், வாடி வழியாக டிச.26-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு சாய்நகா் சீரடிக்கு சென்றடையும்.

சாய்நகா் சீரடியில் இருந்து டிச.27-ஆம் தேதி பகல் 2.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் (வண்டி எண்.06906) மந்த்ராலயம் சாலை, சென்னை எழும்பூா், விழுப்புரம், விருதாசலம், திருச்சி, திண்டுக்கல் வழியாக டிச.29-ஆம் தேதி காலை 8 மணிக்கு கூடல் நகரை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: இபிஎஸ்

தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும்: ராமதாஸ்

ஒரே நேரத்தில் வாக்களித்த மும்மதத்தைச் சேர்ந்த தோழிகள்

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர குரல் கொடுப்பேன்: தங்க தமிழ்செல்வன்

SCROLL FOR NEXT