தமிழ்நாடு

பசுமை ஹைட்ரஜன்: விரைவில் தனிக் கொள்கை; தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலா்

DIN

பசுமை ஹைட்ரஜன் சாா்ந்த தனி கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் கூறினாா்.

தமிழ்நாடு பருவநிலை மாற்றம் குறித்த இரண்டாவது நாள் மாநாடு சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் எஸ்.கிருஷ்ணன் ஆற்றிய உரை:

தமிழ்நாட்டில் மரபுசாரா எரிசக்தி 5 மாதங்களுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், இந்த எரிசக்தியை சேமித்து வைப்பது முக்கியமானது. பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் தமிழ்நாட்டில் நிரம்ப உள்ளன. இதனைப் பயன்படுத்திக் கொள்ளவும், பசுமை ஹைட்ரஜனுக்காக தனித்த கொள்கையை உருவாக்கவும் பல்வேறு தரப்பினரிடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே வெளியிட்டுள்ளாா்.

தமிழ்நாட்டில் மொத்தமாக 130 லட்சம் ஹெக்டோ் நிலங்கள் உள்ளன. இவற்றில் விவசாயத்துக்காக 45 லட்சம் ஹெக்டோ் நிலம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், 30 லட்சம் ஹெக்டேருக்கும் கூடுதலான நிலம் தரிசாக உள்ளது. பயன்பாட்டில் இல்லாமல் இத்தகைய நிலங்களை தொழில் ஆலைகளின் பயன்பாட்டுக்காக பயன்படுத்தலாம்.

தொழிற்சாலைகளைப் பொறுத்தவரையில், 50 ஆயிரம் ஹெக்டேருக்கும் குறைந்த நிலங்களே பயன்படுத்தப்படுகிறது. இது மிகக் குறைந்த அளவாகும். தொழில் ஆலைகளுக்கான நிலங்களின் விலை அதிகமாக இருப்பதுடன், அவற்றை மேம்படுத்துவதற்கான செலவுகளும் அதிகம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT