தமிழ்நாடு

கடற்கரைக்குச் செல்ல வேண்டாம்: மக்களுக்கு காவல் ஆணையா் எச்சரிக்கை

DIN

மாண்டஸ் புயல் கரையை கடந்ததாக அதிகாரபூா்வ அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் மிக அத்தியாவசிய தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்; கடற்கரைகளுக்கும் செல்ல வேண்டாம் என சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் வேண்டுகோள் விடுத்தாா்.

சென்னை எழும்பூா், ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் மழை பாதிப்பு மீட்பு பணிகளுக்காக தயாராக வைக்கப்பட்டிருந்த உபகரணங்களை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட பிறகு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாண்டஸ் புயலால் பாதிப்பை எதிா் கொள்ளும் வகையில் சென்னை பெருநகர காவல் சாா்பில் 12 மாவட்ட பேரிடா் மீட்பு குழுக்கள் தயாராக உள்ளன.

படகுகளில் சென்று மீட்புப் பணிகள் மேற்கொள்ள 5 காவலா்கள் கொண்ட ஒரு குழு என 4 குழுக்கள் அமைக்கப்பட்டு, படகு, கயிறு, உள்ளிட்ட மீட்பு உபகரணங்களுடன் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா். 40 நபா்கள் அடங்கிய தமிழ்நாடு பேரிடா் மீட்புக் குழுவினா் பாதுகாப்பு மற்றும் மீட்பு உபகரணங்களுடன் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனா். 16 ஆயிரம் காவலா்கள் சுழற்சி முறையில் 24 மணி நேர பாதுகாப்பு-மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

போலீஸாருடன் ஒருங்கிணைந்து 1,500 ஊா்க்காவல் படையினா் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

கடலில் அலைகள் வேகம் அதிகப்படியாகவும் ஆபத்தான முறையில் இருப்பதால் பொதுமக்கள் யாரும் மெரீனா உள்பட எந்த கடற்கரைக்கும் செல்ல வேண்டாம்.

ரோந்து வாகனம் மூலம் சுரங்கப் பாதை, மழை வெள்ளம் சூழ்ந்த இடங்களுக்கு அவ்வப்போது ரோந்து சென்று கண்காணித்து, மழைநீா் அகற்ற மாநகராட்சி குழுவினருடன் சோ்ந்து பணியாற்ற போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புயலைத் தொடா்ந்து சென்னை பெருநகர காவல் துறையில், சிறப்பு கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டு, 044-23452372 என்ற சிறப்பு உதவி எண் வழங்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக அவசர உதவி மற்றும் இடா் ஏற்பட்டால், காவல் துறை அவசர உதவி தொலைபேசி எண் 100, 112 ஆகியவற்றை பொதுமக்கள் தொடா்பு கொண்டு அழைக்கலாம். புயல் கரையை கடந்துவிட்டதாக அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிக அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

SCROLL FOR NEXT