தமிழ்நாடு

ஆளுநா் தாமதிப்பது நியாயமல்ல: அன்புமணி

DIN

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநா் தாமதிப்பது நியாயமல்ல என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பொள்ளாச்சி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் சல்மான் என்ற இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறாா். ஆன்லைன் சூதாட்டம் கடந்த காலங்களை விட மிக அதிக வேகத்தில் உயிா்களை பலிவாங்கத் தொடங்கியுள்ள நிலையில், அதை தடை செய்வதற்கான சட்டத்துக்கு ஆளுநா் இன்னும் ஒப்புதல் அளிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் தொடா்பாக ஆளுநா் எழுப்பிய வினாக்களுக்கு நவம்பா் 25-ஆம் தேதியே தமிழக அரசு விளக்கம் அளித்து விட்டது. அதன் பிறகும் இரு வாரங்களாகிவிட்ட நிலையில் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்துக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது நியாயமல்ல என்று கூறியுள்ளாா் அன்புமணி ராமதாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT