தமிழ்நாடு

4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை: வானிலை மையம் தகவல்

10th Dec 2022 10:25 AM

ADVERTISEMENT

திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை  ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (பிற்பகல் 1 மணி வரை) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்

அதுபோல திருப்பூர், கோவை, நீலகிரி, தென்காசி உள்ளிட்ட இதர 30 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிற்பகல் 1 மணி வரை தமிழகம், புதுவையில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் இன்று(சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. புயலையொட்டி நேற்று முதலே சென்னையில் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க | கரையை கடந்தது மாண்டஸ் புயல்!

ADVERTISEMENT
ADVERTISEMENT