தமிழ்நாடு

சென்னையில் 400 மரங்கள் விழுந்துள்ளன: அமைச்சர் தகவல்

10th Dec 2022 10:07 AM

ADVERTISEMENT

மாண்டஸ் புயல் காரணமாக சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சென்னையில் 300-400 மரங்கள் விழுந்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் இன்று(சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் கரையைக் கடந்தது. புயலையொட்டி நேற்று முதலே சென்னையில் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சூறைக்காற்றினால் பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. 

இதையடுத்து, மாண்டஸ் புயல் பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது சைதாப்பேட்டை தொகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'சென்னையில் 300-400 மரங்கள் விழுந்துள்ளன. மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக ஜேசிபி, டிப்பர் லாரி என 200 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. விரைவில் சாலையில் விழுந்த மரங்கள் அகற்றப்படும். மேலும் 169 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன' என்று தெரிவித்தார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | கரையை கடந்தது மாண்டஸ் புயல்!

ADVERTISEMENT
ADVERTISEMENT